ஊட்டி, கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல்: நீதிமன்றம் உத்தரவு


சென்னை: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலை வாசஸ் தலங்களுக்கு தடை செய்யப்பட்ட 28 வகையான பிளாஸ்டிக் பொருட் களை அத்துமீறி கொண்டு செல் லும் வாகனங்களை பறிமுதல் செய்து அவற்றின் பெர்மிட்டை ரத்து செய்ய சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரமாகி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை தடுக்கக்கோரி சுப்ரமணிய கவுசிக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.வி.சுரேஷ்குமார், வனத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் டி. சீனிவாசன். மூத்த வழக்கறிஞர் மோகன், சுற்றுச்சூழலை மேம்படுத்த நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் எம்.சந்தனராமன், சி.மோகன், ஆர்.ராகுல் பாலாஜி ஆகியோர் ஆஜராகி அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள விரிவான உத்தரவு: தமிழகத்தில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. அந்த அரசா ணையின் அடிப்படையில் ஊட்டி, கொடைக்கானல் மலைவாசஸ் தலங்கள் மட்டுமின்றி நீலகிரி முதல் கன்னியாகுமரி அகத்தியர் மலை வரை பரந்து விரிந்து இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் வாட்டர் பெட் பாட்டில் உள்ளிட்ட 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, சேமித்து வைக்கவோ, விற்கவோ, கொண்டு செல்லவோ தடை விதிக்கப் படுகிறது. இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்கள் கொண்டு

செல்லவில்லை என்பதை அதிகாரிகள் நுழைவாயில் பகுதிகளிலேயே கண்காணித்து சோதனையிட வேண்டும். ஒரு வேளை அதிகாரிகளின் சோதனை யையும் மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை மலைக்கு கொண்டு செல்லும் வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்து அவற்றின் பெர்மிட்டையும் ரத்து செய்யும் வகையில் மோட்டார் வாகன சட் டத்தில் நிபந்தனை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

எனவே வாகன ஓட்டிகள் முன் கூட்டியே தடை செய்யப்பட்ட பொருட்கள் தங்களது வாகனங்களில் கொண்டு வரக் கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை ஏற்படுத்த வேண்டும். அதேபோல தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாத வண்ணம் திடக்கழிவு மேலாண்மை குறித்தும், பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு வித்திடும்

வகையிலும் உள்ளாட்சி அமைப்பு களிலும் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ் தலங்களில் உள்ள வியா பாரிகள் பிளாஸ்டிக் உறைகளில் வரும் பிஸ்கெட், சாக்லெட் போன்ற உணவுப் பொருட்களை மக்கும் தன்மையுடைய காகித பைகளில் பயணிகளுக்கு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் உறைகளை பத்திர மாக சேகரித்து அதை உற்பத்தி யாளர்களுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.

அதேபோல சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பொருட் களை கொண்டுசெல்லாமல், தமிழக அரசின் மஞ்சள் பை போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். ஊட்டி, கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி பயணிகளுக்கு கிடைக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் தேவையான குடிநீர் ஏடிஎம் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதேபோல எங்கெங்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பது தொடர்பான மொபைல் ஆப் ஒன்றையும் அறிமுகம் செய்ய வேண்டும்.

உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பிளாஸ்டிக் அல்லாத அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலைக்கு வாடகைக்கு விடும் திட்டத்தையும் அறிமுகம் செய்யலாம். எக்காரணம் கொண்டும் ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் சேகரமாகி விடக்கூடாது என்பதில் அதிகாரிகள், பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு பசுமை வளையத்தை காக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை இந்த வழக்கின் எதிர் மனுதாரர்களாக உள்ள நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையர்கள், தமிழக அரசு உயரதிகாரிகள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் வரும் ஜூன் 6ம் தேதி அன்று தாக்கல் செய்ய வேண்டும்.

x