வசூல் குறைவுக்கு மெமோ: சேலம் சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சேலம்: சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் வழித்தட வசூல் குறைவுக்கு மெமோ கொடுக்கும் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் அஸ்தம்பட்டி அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக சிஐடியு அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கிளை தலைவர் லியாகத் அலி தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் முருகேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, சம்மேளன குழு உறுப்பினர் இளவழகன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து நிர்வாகத்தால் தொழிலாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலு க்கு உள்ளாக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வழித்தட வசூல் குறைவுக்கு மெமோ கொடுத்து, ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கும் செயலை போக்குவரத்து நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பேருந்து வழித்தட பழுதுக்கு சொந்த பணத்தை செலவு செய்யச் சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்து கின்றனர்.

பணி மூப்பு அடிப்படையில் பதவிகள் வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். மருத்துவ காரணங்களால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்க ளுக்கு மாற்றுப் பணி வழங்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இவற்றைக் கண்டிக்கிறோம், எனக் கூறி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், விரைவு போக்குவரத்து ஓய்வு பெற்ற சங்க நிர்வாகி மணிமுடி, மாநிலத் துணைத் தலைவர் செல்லப்பன், கிளைச் செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

x