பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நீதிமன்றத்தில் காவல் உதவி ஆய்வாளர், இருப்பிட மருத்துவர் ஆஜர்


கோவை: பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண் குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே கைதான 9 பேரிடம் நீதிபதி கேள்விகள் கேட்டு பதிவு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் (ஆர்.எம்.ஓ) ராஜா ஆகியோர் நேற்று ஆஜராகினர். இருவரிடமும் எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். வழக்கு விசாரணை இன்றும் நடைபெறுகிறது.

x