கோவை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண் குவளைகளை வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர் வழங்கி வருகின்றனர்.
இது குறித்து, அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜுதின் கூறியதாவது: கோடை வெயிலால் சிரமப்படும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மாணவர்களுக்கு அன்பளிப்பாக மண் குவளைகளை வழங்கி வருகிறோம். மண் குவளைகளில் தண்ணீர் வைப்பதால் இயற்கை மீது மாணவர்களு க்கு ஆர்வம் ஏற்படும்.
ஆர்வமுள்ளவர்கள் மொட்டை மாடி, மரங்களுக்கு அடியில் பறவைகளுக்கு சிறுதானிய உணவுகள், தண்ணீர் வைத்து வருகின்றனர். எங்கள் அமைப்பு சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக மண் குவளைகளை வழங்கி வருகிறோம். இதுவரை 2300 மண் குவளைகளை இலவசமாக வழங்கி உள்ளோம், என்றார்.