காஞ்சிபுரம்: வக்பு வாரியச் சட்டத் திருத்தம் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குல் என்று கூறியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் இன்று (ஏப்.) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகாஞ்சிபுரம் மசூதி அருகே தொழுகைக்கு வந்த முஸ்லிம்கள் தொழுகை முடிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்பு வாரியச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றும், முஸ்லிம் மக்களின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். வக்பு சொத்துக்களை பாதுகாப்போம் என்றும் முழக்கமிட்டனர். இந்தியாவின் பன்முகத் தன்மையையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாப்போம் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.