ஏப்.25ல் என்எல்சி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான தேர்தல்: வெல்லப்போவது யார்?


கடலூர்: நெய்வேலி டவுன் ஷிப் வட்டம் 20ல் உள்ள கற்றல் மற்றும் மேம் பாட்டு மையத்தில் என்எல்சியின் அங்கீகரிக்கப் பட்ட தொழிற்சங்கங்களின் தேர்தலுக்கான ரகசிய வாக்கெடுப்பு குறித்த தொழிற் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

துணைதலைமை தொழிலாளர் ஆணையர் சவுத்ரி தலைமை தாங்கினார். இதில் என்எல்சி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் பாரி, தலைவர் திருமாவளவன். சிஐடியு ஜெயராமன், பாட்டாளி தொழிற்சங்கம் தலைவர் செல்வ ராஜ், அண்ணா தொமுச பொதுச் செயலாளர் வெற்றிவேல், பிஎம்எஸ் சங்கத் தலைவர் வீர வன்னியராஜா, திராவிட தொழிலாளர் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன். என்எல்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 16ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளாகும். வரும் 17ம் தேதி தொழிற்சங்கங்களுக்கான எண்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டு, வரும் 25ம் தேதி வாக்குப் பதிவு, அன்று இரவே வாக்கு எண்ணிக்கையை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதனை துணை தலைமை தொழிலாளர் ஆணையர் சவுத்ரி அறிவிப்பாக வெளியிட்டார். இத்தேர்தலில் அங்கீகா ரத்தை பெறும் தொழிற்சங்கங்கள். தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் சங்கங்களாக இருக்கும்.

x