கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு என சாலைகளை அகற்றினால் போக்குவரத்து பாதிக்கும்: கல்யாணசுந்தரம் எம்.பி. கருத்து


கும்பகோணம்: கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சாலைகளை அப்புறப்படுத்தினால், போக்குவரத்து பாதிக்கும் என எஸ்.கல்யாண சுந்தரம் எம்.பி. தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். கும்பகோணம் தனி மாவட்டம் கோரும் அமைப்பினர், வரும் 19ம் தேதி எம்.பி, எம்.எல்.ஏக்களின் அலுவலக த்தை முற்றுகை யிடுவோம் என்று அறிவித்திருப்பது, எதிர்க்கட்சியினர் வேலை. இது தேவையில்லாதது.

கும்பகோணம் வட்டம் கடிச்சம் பாடியில் 7 ஏக்கரில் டைடல் பூங்கா அமைப்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார். கும்பகோணத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், விளைநிலங்கள் வீடு களாகிவிட்டன. அப்போது நீர்ப் பாசன பகுதியாக இருந்த பகுதிகள் தார் சாலைகளாக மாற்றப்பட்டு, போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் குறிப்பிடுவதுபோல, கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சாலைகள் எல்லாம் அப்புறப்படுத்தப் பட்டால், போக்குவரத்து பாதிக்கப்படும். இதை, மாவட்ட ஆட்சியாளர், மாநகராட்சி நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி. இந்த வழக்கைத் திரும்பப் பெற வைக்க வேண்டிய கடமை. அவர்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x