தங்கம் பவுனுக்கு ரூ.1,200 உயர்வு


சென்னை: சென்​னை​யில் கடந்த 3-ம் தேதி தங்​கம் விலை பவுனுக்கு ரூ.68,480-ஆக உயர்ந்து புதிய உச்​சத்தை எட்​டியது. பின்​னர், தங்​கம் விலை குறைந்​தது. கடந்த 8-ம் தேதி ரூ.65,800-ஆக இருந்​தது. பின்​னர் தங்​கம் விலை மீண்​டும் உயரத் தொடங்​கியது. இந்​நிலை​யில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.68,480-க்கு விற்​பனை​யானது. ஒரு கிராம் தங்​கம் ரூ.150 உயர்ந்து ரூ.8,560-க்கு விற்​பனை​யானது. 24 காரட் சுத்த தங்​கம் பவுன் ரூ.74,704-க்கு விற்​கப்​பட்​டது.

வெள்ளி கிரா​முக்கு ரூ.3 உயர்ந்து ரூ.107 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1 லட்​சத்து 7 ஆயிர​மாக​வும் இருந்​தது. சென்னை தங்​கம் மற்​றும் வைர நகை வியா​பாரி​கள் சங்​கப் பொதுச்​செய​லா​ளர் எஸ்​.​சாந்​தகு​மார் கூறும்​போது, “இறக்​கும​திப் பொருட்​களுக்கு அமெரிக்க அரசு அதிக வரி விதித்​தது, அமெரிக்கா - சீனா இடையே​யான வர்த்​தகப் போர் ஆகிய​வற்​றால் பங்​குச்​சந்தை சரிவடைந்​துள்​ளது. இதனால், முதலீட்​டாளர்​கள் பார்வை தங்​கத்​தின் மீது திரும்​பி​யுள்​ளது. எனவே, சர்​வ​தேச சந்​தை​யில் தங்​கத்​தின் விலை தொடர்ந்து உயர்​கிறது. இதன் தாக்​கத்​தால் இந்​தி​யா​விலும் தங்​கம் விலை உயர்​கிறது​" என்​றார்​.

x