கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தில் காலாவதி பொருட்கள் - நெல்லை ஆட்சியரிடம் மனு


கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தில் காலாவதியான பொருட்கள் இருந்ததை நாம் தமிழர் கட்சி சுட்டிக்காட்டிய தை அடுத்து, அப்பொருட்கள் மாற்றப்பட்டன.

திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழர் கட்சி இணை செயலர் மாரிசங்கர் தலைமையில் அக் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செட்டிக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பர்கிட் மாநகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில் காலாவதியான நெய் பாட்டில், பேரீச்சம் பழம் பாக்கெட்டுகள் இருந்தன.

இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் பரிசு பெட்டகங்கள் பெற்ற கர்ப்பிணி பயனாளிகளின் வீட்டுக்கு நேரில் சென்று, காலாவதியான பொருட்களை மாற்றி, வேறு காலவரையறை உடைய பொருட்கள் வழங்கியுள் ளனர். இதுபோன்ற தவறுகள் வரும் காலங்களில் நடைபெறாத வகையில் மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

x