திருநாகேசுவரம் கோயில் நிதியில் முறைகேடு: சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு


மதுரை: தஞ்சை மாவட்​டத்​தைச் சேர்ந்த செல்​லப்பா குருக்​கள், சங்​கர் குருக்​கள் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில், “2021-ல் நடை​பெற்ற திரு​நாகேசுவரம் கோயில் கும்​பாபிஷேக விழா​வுக்காக நன்​கொடை வசூலிக்​கப்​பட்​ட​தில் நடந்த முறை​கேடு தொடர்​பாக நாங்​கள் கேள்வி எழுப்​பிய​தால், எங்​களை இடமாற்​றம் செய்​துள்​ளனர். இந்த உத்​தரவை ரத்து செய்​து, முறை​கேடு குறித்து விசா​ரிக்க உத்​தர​விட வேண்​டும்” என்று கூறி​யிருந்​தனர்.

வழக்கை விசா​ரித்த நீதிபதி புகழேந்தி தனது உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: கோயில் கும்​பாபிஷேக நன்​கொடை தொடர்​பாக அறநிலை​யத் துறை அதி​காரிகள் நடத்​திய முதல்​கட்ட விசா​ரணை​யில் குற்​றம் நடந்​தது தெரிய​வந்​துள்​ளது. ரூ.80 லட்​சம் வரை கோயில் நிதி கும்பாபிஷேகத்துக்​காக எடுக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, கும்​பாபிஷேக நிதி முறை​கேடு புகார் குறித்து சிபிசிஐடி விசா​ரித்​து, புகாரில் முகாந்​திரம் இருந்​தால் வழக்கு பதிவு செய்​து, விசா​ரிக்க வேண்​டும். சிபிசிஐடி எஸ்​.பி. சண்​முகபிரி​யா, இந்த விசா​ரணையை கண்​காணித்​து, மாதாந்​திர அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். கும்பாபிஷே பணி எவ்​வாறு மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது என்​பதை அறநிலை​யத் துறை ஆணை​யர் ஆய்வு செய்ய வேண்​டும்.

எதிர்​காலத்​தில் வேறு எந்​தக்கோயி​லிலும் இதுபோன்ற குறை​பாடு ஏற்​ப​டா​மல் பார்த்​துக்​கொள்ள வேண்டும். இந்த வழக்கில் நீதி​மன்​றம்உரிய உத்​தரவு​களைப் பிறப்​பிக்​கும். விசா​ரணை வரும் 30-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

x