புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் கோபூஜை: ஆளுநர், அமைச்சர் பசுவுக்கு பூஜை செய்து வழிபாடு


புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோயிலில் கோபூஜை யொட்டி ஆளுநர், அமைச்சர் பங்கேற்றனர். அவர்கள் பசுவுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலின் 10ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சஹஸ்ர சங்காபிஷேகம் விழா 7ம் தேதி தொடங்கியது. இன்று காலை 27 நட்சத்திரங்களின் கோமாதா பூஜை நடந்தது. இந்நிகழ்வில் கோயிலுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்று கோமாதாவுக்கு பூஜை செய்தார்.

அதேபோல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவரது மனைவியுடன் பங்கேற்று பூஜை செய்து வழிபட்டார். 27 நட்சத்திரங்களின் நலம் பெற வேண்டி இந்த கோமாதா பூஜை நடந்ததாக கோயில் தரப்பில் தெரிவித்தனர். 9ந் தேதி காலை 6:30 மணிக்கு மேல் ஏகதின லட்சார்ச்சனை, 10ந் தேதி மாலை 6:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, வரும் 11ந் தேதி மூலவர் மணக்குள விநாயகருக்கு கலசாபிஷேகத்துடன் 1008 சங்காபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.

x