புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு


சென்னை: வங்​கக்​கடலில் புதிய காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகி​யுள்​ளது. இதன் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​கிழக்கு வங்​கக்​கடல் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​கள்​மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, தெற்கு வங்​கக்​கடலின் மத்​திய பகு​தி​களில் காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகி​யுள்​ளது. இது இன்று (ஏப்​.8) வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​வக்​கூடும். தொடர்ந்து அதற்​கடுத்த 48 மணி நேரத்​தில் வடக்கு திசை​யில் நகர்ந்து மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​வக்​கூடும்.

மேலும், தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் இருந்​து, தென்​மேற்கு வங்​கக்​கடல் வழி​யாக தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது. இவற்​றின் காரண​மாக, தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் இன்று இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் (40-50 கி.மீ. வேகத்​தில்) லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்டை ஆகிய டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகு​தி​களி​லும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

ஏப்​ரல் 9 (நாளை) முதல் 13 வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் இன்று முதல் 10-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயர வாய்ப்பு உள்​ளது. ஓரிரு பகு​தி​களில் இன்று அதிக வெப்​பநிலை​யும், அதிக ஈரப்​ப​த​மும் இருக்​கக்​கூடும் என்​ப​தால், மக்​களுக்கு அசவு​கரி​யம் ஏற்​படலாம்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். ஒருசில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக கன்​னி​யாகுமரி மாவட்​டம் பெருஞ்​சாணி அணை, புத்​தன் அணை, மதுரை மாவட்​டம் எழு​மலை​யில் 8 செ.மீ. மதுரை மாவட்​டம் கள்​ளிக்​குடி, கரூர் மாவட்​டம் அரவக்​குறிச்​சி​யில் 7 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது.

x