சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு


சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் போது மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள் பார்வையிடும் அதிகாரிகள், ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிகின்றனர்.

அதன்படி, சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் என்எம்சி முதுநிலை கல்வி வாரிய தலைவர் விஜய் ஓஜா தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

கல்லூரி வளாகம், மாணவர் விடுதி, ஆய்வகங்களை பார்வையிட்ட அவர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினர். மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.