திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு சிலர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதை இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் வீடியோ எடுத்ததால் மது அருந்தியவர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீஸார் அங்கு சென்றபோது 2 பேர் தப்பியோடிவிட்டனர். மற்ற நால்வரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள், திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் இளையராஜா, கார் ஓட்டுநர்கள் பிரபு, மகேஸ்வரன், ரயில்வே ஊழியர் பிரபு ஆகியோர் என்பது தெரியவந்தது.
அப்போது, காவலர் மணிகண்டன், அவர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், அரசு பள்ளி வளாகத்தில் மது அருந்தியவர்களுடன் பேசிக் கொண்டிருந்த காவலர் இளையராஜாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் நேற்று உத்தரவிட்டார்.