[X] Close

திண்டுக்கல் மாவட்டத்தில் அணை, குளங்களை நிரப்பிய ‘கஜா’


dindukkal-gaja-cyclone-effect

  • kamadenu
  • Posted: 17 Nov, 2018 12:34 pm
  • அ+ அ-

திண்டுக்கல் மாவட்டத்தை தாக்கிய கஜா புயலால் குளம், கண்மாய்கள் நிரம்பின. வரதமாநதி அணை சில மணி நேரங்களிலேயே 19 அடி உயர்ந்து நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை கஜா புயல் திடீரென தாக்கத் தொடங்கியது. மாவட்ட எல்லையான நத்தம் கரந்தமலை பகுதி, திண்டுக்கல் அருகே சிறுமலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கத்தால் பலத்த மழை பெய்தது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது.

கரந்தமலையில் உருவாகும் திருமணி முத்தாற்றில் 10 ஆண்டு களுக்கு பிறகு வெள்ளம் பெருக் கெடுத்தது. சிறுலை அடிவாரத்தில் வறண்டு கிடந்த மாவூர் நீர்த்தேக்கம் ஒரே நாளில் நிரம்பியது. நீர்த் தேக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி வாய்க்கால் முறையாக இல்லாததால் திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் பாய்ந்தது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள குளம், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழநி அருகேயுள்ள வரதமாநதி அணை நிரம்பியது. நேற்று காலை வரை அணை நீர்மட்டம் 47.11 அடி. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் சில மணி நேரங்களிலேயே அணையின் நீர்மட்டம் 19 அடி உயர்ந்து மொத்த உயரமான 66.47 அடியை எட்டியது. மேலும் அணையில் இருந்து வெளியேறிய நீரால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கொடைக்கானல் மலைச்சாலையை கடந்து தண்ணீர் சென்றது. இதனால் கொடைக்கானல் - பழநி மலைச்சாலை மூடப்பட்டது.

மழை அளவு விவரம் (மி.மீ.-ல்) :

திண்டுக்கல் -58.8, நத்தம் - 44, நிலக்கோட்டை - 93, பழநி - 34.2, காமாட்சிபுரம் - 60 , கொடைக்கானல் மலைப்பகுதி- 138.5 பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 50 மி.மீ. பதிவானது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close