[X] Close

திருச்சி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், தேனி, மதுரை மாவட்டங்களில் கனமழை தீவிரம்; திண்டுக்கல்லில் கஜா தீவிரம்; கரண்ட் கட்!


gaja-cyclone-dindigul

  • kamadenu
  • Posted: 16 Nov, 2018 11:21 am
  • அ+ அ-

திண்டுக்கல்லில் கஜா புயல் தீவிரம் அடைந்ததையொட்டி, திண்டுக்கல் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. மின்சப்ளை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருப்பூர், கரூர், தேனி முதலான மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. பலத்த காற்று வீசிவருகிறது.

கடலோரப் பகுதியில் இருந்து கரையைத் தொட்ட கஜா புயல் இப்போது திண்டுக்கல்லுக்கு மேலே இருப்பதால், திண்டுக்கல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இந்த மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல ஊர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

அதிராம்பட்டினத்தில் கரையைத் தொட்ட கஜா புயலால், இனி கடலோர மாவட்டங்களில் காற்றும் மழையும் குறையத் தொடங்கும் அதேவேளையில் இப்போது கஜா புயலானது நிலப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் திண்டுக்கல்லுக்கு அருகே கஜா புயல் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்ததாவது:

 கஜா புயல் கரையைக் கடந்ததை அடுத்து, இப்போது திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இந்தப் புயல் உருவாகியுள்ளதால், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் ஈரோடு, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மழையும் பெய்யக்கூடும்.

கடலில் இனி சீற்றம் இருக்காது. கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றும் மழையும் இருப்பது குறைந்துவிடும்.

ஆனால், திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழையும் மழையும் பெய்யும்.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

இதையொட்டி, தற்போது திண்டுக்கல், திருச்சி, கரூர், மதுரை, திருப்பூர், தேனி முதலான மாவட்டங்களில் பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல ஊர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close