[X] Close

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்- அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி மும்முரம்


free-cycles

  • kamadenu
  • Posted: 16 Nov, 2018 10:42 am
  • அ+ அ-

என்.சன்னாசி

மதுரை

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட் டால் நலத்திட்ட உதவிகளை வழங்க முடியாது என்பதால், வழக்கத்தைவிட முன்னதாகவே இத்தொகுதியிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்க அமைச் சர்களின் அறிவுறுத்தலின் பேரில் கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் உட்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் என 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள் ளன. இவற்றிற்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்ப டலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் நடத் தப்படும் என்று ஒரு தரப்பும், இல்லை அதற்கு முன்னதாகவே நடத்தப்படும் என்று மற்றொரு தரப்பிலும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள வசதியாக ஆளுங் கட்சியினர் இப்போதே பல்வேறு பணிகளை தொடங்கி உள்ளனர். குறிப்பாக, இத்தொகுதிகளில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்1 மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள்களை முன்கூட்டியே வழங்க திட் டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கல்வித்துறை அதி காரிகளிடம் அமைச்சர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதை யடுத்து திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்னும் சில வாரங்களில் இலவச சைக் கிள்கள் வழங்கப்படும் என கல்வித்துறையினர் தெரிவித் துள்ளனர்.

இது குறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மதுரை மாவட் டத்திலுள்ள அனைத்து பள்ளி களுக்கும் தேவையான அரசின் இலவச சைக்கிள்கள் வர தொடங்கியுள்ளன. மாப்பா ளையம் பகுதியில் இருக்கும் பள்ளிகளில்கூட சைக்கிள்கள் வழங்கப் பட்டுள்ளன. இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியானால் தேர்தல் நடத்தை விதிமுறையால் நலத்திட்ட உதவிகளை வழங்க இயலாது.

இது போன்ற சூழலில் உயர் அதிகாரிகளின் அறிவுறுத் தலின்பேரில், மதுரை மாவட்டத்தில் இடைத்தேர்தலை சந்திக்க இருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு முக்கி யத்துவம் கொடுத்து, அவர்களுக்கு இலவச சைக்கிள்களை விரைவாக வழங்க, ஏற்பாடு செய்து வரு கிறோம்.

ஓரிரு வாரத்தில் அவர்களுக்கு சைக்கிள்கள் வழங் கப்படும். அடுத்தடுத்து மற்ற பள்ளிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close