களைகட்டியது சீசன் - குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!


தென்காசி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி பலத்த மழை பெய்தது. மலைப் பகுதிகளில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்ததால் 3 நாட்களுக்கு பின்னர் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயில் கொடுமையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

விடுமுறை தினமான நேற்று குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. கோடை காலத்திலும் அருவிகளில் நீர் விழும் நிலையில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

x