கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.154: பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் விற்பனை


ஈரோடு: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை கிலோ ரூ.154-க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கூட்டுறவுச் சங்கத்தில் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் நடக்கும் கொப்பரை ஏலத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கொப்பரை விற்பனையாகி வருகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி கொப்பரை விலை கணிசமாக உயர்ந்தது. ஜனவரி மாதம் 1-ம் தேதி அதிகபட்சமாக ரூ.153-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த கொப்பரை ஏலத்தில் முதல்தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.154.89-க்கு விற்பனையானது.

இந்த ஏலத்தில், மொத்தம் 2,919 மூட்டை கொப்பரை வரத்தானது. இதில், முதல் தரம் குறைந்த பட்சம் கிலோ ரூ.145.10, அதிகபட்சம் ரூ.154.89-க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் குறைந்தபட்சம் கிலோ ரூ.25.89, அதிகபட்சம் ரூ.149.11-க்கு விற்பனையானது. ஏலத்தில் மொத்தம் 1.36 லட்சம் கிலோ கொப்பரை, ரூ.1.90 கோடிக்கு விற்பனையானது.

x