தென்காசி: புளியங்குடி அருகே சான்றோர் மடத்து தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சகாயமேரி தம்பதியின் மகன்கள் பிரணவ் கிருஷ்ணா (6), தர்னிஷ் கிருஷ்ணா (4) ஆகியோர், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
பள்ளியில் இருந்து நேற்று முன்தினம் மாலை வேனில் வந்த மகன்களை அழைத்து வர மெயின்ரோடு பகுதியில் சகாயமேரி காத்திருந்தார். வேனில் இருந்து இறங்கிய தர்னிஷ் கிருஷ்ணா, சாலையின் எதிர்புறத்தில் தனது தாத்தா நின்றதை பார்த்ததும் அவரை நோக்கி ஓடியுள்ளார். அப்போது, புளியங்குடியில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார்.
புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தர்னிஷ் கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார். புளியங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.