புதுச்சேரியில் கடன் தொல்லையால் ஜவுளிக்கடை உரிமையாளர் தற்கொலை; திருமணமாகி 8 மாதத்தில் சோகம்!


புதுச்சேரி: லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்தவர் முருகவேல் (32). இவரது மனைவி அனிதாமரி. இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. அனிதா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். முருகவேல் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இதற்காக அவர் , கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு வந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த முருகவேல் கடந்த 27-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

குடும்பத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகடை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x