திண்டுக்கல்: என்.எஸ்.நகரில் பெருமாள் கோயில், விநாயகர் கோயில் உள்ளது. நேற்று காலை கோயில் பூசாரி தங்கவேல் கோயிலை திறந்த போது அங்கு பெருமாள் சந்நிதி முன்பிருந்த கருடாழ்வார் சிலை, விநாயகர் சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. நந்தி சிலை திருடப்பட்டிருந்தது.
இது குறித்து தாடிக்கொம்பு போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.