மினி வேன் கவிழ்ந்து தந்தை, மகன் உயிரிழப்பு - கோவை அருகே சோகம்


கோவை: சிறுமுகை அருகே உள்ள கூத்தாமண்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் பாபு (35). இவரது மகன் சாய் மித்ரன் (5). உறவினரின் சுப நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்துகொண்ட கார்த்திக் பாபு, மகன் சாய் மித்ரன் மற்றும் உறவினர் குகன் ஆகியோரை ஏற்றிக்கொண்டு மினி வேனில் சென்னம் பாளையத்தில் இருந்து வெள்ளி குப்பம்பாளையம் வழியாக தொட்டபாவி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

வளைவு ஒன்றில் திரும்ப முயன்ற போது மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாய் மித்ரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கார்த்திக் பாபு, குகன் ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பாபு உயிரிழந்தார். சிறுமுகை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x