கரூர் சோகம்: எரியும் குப்பையில் மயங்கி விழுந்த தூய்மை பணியாளர் உயிரிழப்பு


கரூர்: வாங்கல் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர் என்ற பழனி (54). வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார்.

சீனிவாசபுரம் பாபுலர் முதலியார் வாய்க்கால் அருகேயுள்ள குப்பைமேடு வழியாக பன்னீர் அண்மையில் நடந்து சென்றபோது, எரியும் குப்பையில் இருந்து வந்த புகையை சுவாசித்ததில் மயங்கி எரியும் குப்பையில் விழுந்து காயமடைந்தார்.

இதையடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பன்னீர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x