தலைவலி தைலத்தை தின்ற குழந்தை உயிரிழப்பு: பாளையங்கோட்டை அருகே சோகம்


நெல்லை: பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டத்தில் தலைவலி தைலத்தை தின்ற 10 மாத குழந்தை உயிரிழந்தது.

மேலப்பாட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன்- சிவனம்மாள் தம்பதியின் 10 மாத குழந்தை ஆத்விக் முகிலன். நேற்று முன்தினம் சிவனம்மாள் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். வீட்டுக்குள் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. இந்நிலையில் இரவில் குழந்தை விடாமல் அழுததுடன், திடீரென்று மயக்கம் அடைந்துள்ளது.

குழந்தை விளையாடிக் கொண்டிருந்த அறையில் தலை வலி தைல டப்பா திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவனம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை நள்ளிரவில் உயிரிழந்தது. இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

x