[X] Close

மாலை 4 மணிக்கு முன்பாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவும்!- அரசு அறிவுறுத்தல்


gaja-cyclone

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Nov, 2018 15:46 pm
  • அ+ அ-

கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

கஜா புயல் இன்று இரவு 11 மணிக்குள் நாகை மாவட்டத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் துறைமுகத்தில் 9-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. கஜா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

பாம்பன் துறைமுகத்தில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

வேடிக்கை பார்க்கவோ புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வத்திலோ கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு  எச்சரித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close