புதுச்சேரி: ஹெல்மெட் அணியாமல் வந்த காவலர்கள், அரசு ஊழியர்களுக்கு அபராதம்


புதுச்சேரி: ஹெல்மெட் அணியாமல் வந்த காவலர்கள், அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புதுவையில் ஹெல்மெட் கட்டாய சட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல காவலர்கள் பணிக்கு வரும் போதும், ரோந்து செல்லும்போதும் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல் துறை அறிவித்திருந்தது. ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.

புதுவையில் அபராதம் விதிப்பது குறைவாக இருந்தாலும், கிராமப்புறங்கள், மாநில எல்லைகளில் அபராதம் விதிப்பது அதிகமாக உள்ளது. குறிப்பாக ஒரு காவல் நிலையத்துக்கு கட்டாயம் 20 பேருக்காவது அபராதம் விதிக்கும்படி காவல் துறை தலைமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவலர்களே ஹெல்மெட் அணிவதில்லை என புகார் எழுந்தது.

இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் வந்த காவலர்களுக்கு அபராதம் விதிக்க டிஜிபி ஷாலினி சிங் உத்தரவிட்டார். இதன்பேரில் நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு ஹெல்மெட் அணியாமல் வந்த காவலர்கள், ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீஸார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

x