விருத்தாச்சலம்: மங்கலம்பேட்டையில் குறுகிய பாலம் கட்டுவதை எதிர்த்து மக்கள் போராட்டம்!


கடலூர்: விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள ரூப நாராயண நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது பள்ளிப்பட்டு கிராமம்.

இக்கிராமத்தில் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை பிரதான சாலையில் இருந்து கூட்டுறவு நகர் தெரு செல்லும் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புதிய தெருவுக்கு பிரிந்து செல்லும் இணைப்புச் சாலையின் முகப்பு பகுதியில் இருந்த கான்கிரீட் பாலத்தை அகற்றி விட்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.6.32 லட்சம் மதிப்பில் புதிய தரை பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த புதிய பாலம். ஏற்கெனவே இருந்த பாலத்தின் அகலத்தை விட குறைவாகவும், புதிய தெருவுக்கு செல்வதற்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பாலம் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் பாலத்தை விரிவுப்படுத்திக் கட்டக்கோரி புதிய தெருவில் வசிப்பவர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அஙகு வந்த ரூப நாராயண நல்லூர் ஊராட்சி செயலாளர் சரவணன், மங்கலம்பேட்டை போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் அருகில். 4 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் புதிய தெருவின் வழியாக ஊருக்குள் சென்று வருகிற வகையில் மற்றொரு சிறிய பாலம் அமைப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

x