தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (பிப்.25) முதல் மார்ச் 1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

அதே நேரத்தில் நாளை முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.இந்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி காணப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x