கோவை பரபரப்பு: பிரேக் பிடிக்காமல் சாலை தடுப்பு சுவரில் மோதி நின்ற அரசு பேருந்து!


கோவை: நேற்று சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால், தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

தமிழக - கேரள எல்லைப் பகுதியான வேலந்தாவளத்தில் இருந்து, அரசு பேருந்து நேற்று காலை கோவை உக்கடம் நோக்கி வந்துகொண்டிருந்தது. பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். சுகுணாபுரம் அருகே சென்றபோது பேருந்தில் ‘பிரேக்’ பிடிக்கவில்லை. ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயன்றார். இருப்பினும் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி பேருந்து நின்றது.

அவ்வழியே வாகனங்கள் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற குனியமுத்தூர் போலீஸார் பயணிகளை மற்றொரு பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். போக்குவரத்து பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x