மதுரை: வத்தலகுண்டில் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் திண்டுக்கல் ஆட்சியரிடம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வத்தலகுண்டை சேர்ந்த ராஜப்பாண்டி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "வத்தலக்குண்டு சவுத் லயன்ஸ் கிடா முட்டு நண்பர்கள் சங்கம் மற்றும் வத்தலக்குண்டு ஊர் பொதுமக்கள் சார்பாக முதலாம் ஆண்டு கிடா முட்டு போட்டி, வத்தலகுண்டு கண்ணன் நகரில் மார்ச் 12ல் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக விவசாயிகள் வளர்க்கும் கிடாக்களை தயார் செய்து வருகின்றனர். இதற்கு அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் டீக்கா ராமன், செந்தில் குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரம் தள்ளி வைத்தனர்.