[X] Close

‘குளிர்விட்டுப்போச்சு’ - நான் கேக்கட்டுமா? - ஜெயக்குமாருக்கு ரஜினி பதிலடி


rajini-jeyakumar

  • kamadenu
  • Posted: 13 Nov, 2018 13:42 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

சர்க்கார் சர்ச்சை தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா இல்லையென்பதால் நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது என்று சொல்லியிருந்தார். இதேகேள்வியை நான் அமைச்சரைப் பார்த்து கேட்கட்டுமா? என்று ரஜினி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கிய ரஜினியிடம், நேற்று நிருபர்கள், ஏழு பேர் விடுதலை விவகாரம் குறித்துக் கேட்டனர். உடனே ரஜினி, எந்த ஏழு பேர் என்று கேட்டார். இது வைரலாகப் பற்றிக்கொண்டது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் ரஜினியை கேலி செய்தும் கிண்டல் செய்தும் மீம்ஸ்கள் பறந்துகொண்டிருக்கின்றன.

அதேசமயத்தில், பாஜக ஆபத்தான கட்சி என்று சொல்லி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகிறார்களே என்று கேட்டதற்கு, அவர்கள் அப்படி நினைக்கிறார்கள். அது சரியாகத்தானே இருக்கும் என்று பதில் சொன்னார் ரஜினி.

இந்த இரண்டு விஷயங்களுமே தீயாய்ப் பற்றிக்கொண்டன.

இந்த வேளையில், இன்று 13ம் தேதி தனது போயஸ்கார்டன் இல்லத்தில் நிருபர்களைச் சந்தித்தார் ரஜினி.

அப்போது ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பான விளக்கம் அளித்தார். பாஜக ஆபத்தான கட்சி என்று எதிர்க்கட்சிகள் நினைக்கிறார்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் என்றார். பத்துப்பேர் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரை அழிக்க வந்தால், பத்துப்பேர் பலசாலியா, ஒருவர் பலசாலியா என்று கேட்டு, மோடிதான் பலசாலி என்று சூசகமாக பதிலளித்தார்.

சர்கார் படம் சம்பந்தமான சர்ச்சையில், அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது’ என்று சொன்னது குறித்துக் கேட்டார்கள்.

அதற்கு ரஜினி, ‘அதுமாதிரியெல்லாம் கேட்கக்கூடாது. எதற்கும் ஒரு அளவு இருக்கு. அவர் மிகப்பெரிய பதவியில் இருக்கிறார். நல்ல பொறுப்பில் இருக்கிறார். அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் கேட்பது சரியல்ல.

அமைச்சரைப் பார்த்து, ‘ஜெயலலிதா இல்லாததால் உங்களுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா?’ என்று நாங்கள் கேட்கட்டுமா? அது மரியாதையாக இருக்குமா? என்று ரஜினி பதிலடி கொடுத்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close