[X] Close

ஜாதி அடையாளத்துடன் கடிதம் எழுதினார் பெரியார்: திமுகவை வம்பிழுக்கும் எச்.ராஜா


hraja-slams-stalin

எச்.ராஜா, ஸ்டாலின் - கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 12 Nov, 2018 20:23 pm
  • அ+ அ-

குரூப்-2 தேர்வில் பெரியார் பெயரை ஜாதி அடையாளத்துடன் வினாத்தாளில் கேட்கப்பட்டதை ஸ்டாலின் கண்டித்திருந்தார்.  ஜின்னாவுக்கு பெரியார்,  ஜாதி அடையாளத்துடன் கடிதம் எழுதியுள்ளதாக எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டு வம்பிழுத்துள்ளார்.

நேற்று தமிழக அரசின் தேர்வாணையத்தால் குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாளில் ஒருக்கேள்வியில் பெரியாரை ஜாதி அடையாளத்துடன் கேள்வி கேட்கப்பட்டிருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்திருந்தார். அவரது அறிக்கையில் “குரூப்-2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு ‘சாதிப்பட்டம்’ சூட்டப்பட்டிருக்கும் கொடுமை. கேள்வித்தாள் தயாரித்தவருக்கும், மேற்பார்வை செய்தவர்களுக்கும் முதலில் தமிழ்நாடு, ஈரோடு தெரியுமா? இதற்குக் காரணமானவர்களை பணி நீக்கம் செய்வதோடு, தமிழக அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் பெரியார் ஜாதி அடையாளத்துடன் பதில் எழுதியதாக தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவு: “1944 ல் திராவிடஸ்தானுக்கு ஆதரவு கேட்டு ஜின்னாவிற்கு ஈ.வெ.ரா எழுதிய கடிதத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றே தன்னை அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார்.”

பெரியார் ஜாதி, மதம் இல்லை என்று சொன்னாலும் அவரை ஜாதியை பயன்படுத்தினார் என்று நிரூபிக்க எச்.ராஜா மெனக்கெட்டதற்கு கீழே நெட்டிசன்களே பதிலளித்துள்ளனர்.

இதற்கு அவரது பதிவில் சிலர்:

Anonymous‏ என்பவர் “1955-ல் தான் பேருக்கு பின் இருந்த சாதி பெயரை நீக்கினார்கள். விட்டா பெரியார் பள்ளி சான்றிதழ்லாம் ஆவணம்னு போடுவாரு போல” என்று பதிலளித்துள்ளார்

Asar Abdhullah‏ என்பவர் பதிலில்: இது என்ன book ? மொட்டயா இப்படி போடுரது .... இதெல்லாம் ஒரு ஆதாரமா? என்று கேட்டுள்ளார்.

இன்னொருவர் சத்யராஜ் நடித்த பெரியார் படத்தில் அவரது ஜாதி அடையாளத்துடந்தான் பாத்திரம் வரும் அப்போது ஏன் இவர்கள் எதிர்ப்பை காண்பிக்கவில்லை என்று கேட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close