பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு: விருதுநகரில் சீமான் மீது வழக்குப் பதிவு


சீமான் | கோப்புப் படம்

விருதுநகர்: தந்தை பெரியார் குறித்து இழிவாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, தந்தை பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையியில், இதுதொடர்பாக விருதுநகரைச் சேர்ந்த திராவிடர் கழக தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், சீமான் கூறியபோதுபோல் எந்த கருத்தையும் தந்தை பெரியார் எந்த இடத்திலும் பேசியது இல்லை, எழுதியதும் இல்லை. சீமான் தனது அரசியல் சுயலாபத்திற்காக திட்டமிட்டு தந்தை பெரியாரின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் எந்தவித ஆதாரமும் இன்றி பொய்யான செய்தியை பரப்பி தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் தீய நோக்கத்தோடு பேசியுள்ளதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர் பேசிய காணொலியை உடனடியாக நிறுத்தக்கோரியும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக, சீமான் மீது விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

x