[X] Close

அதிதீவிர புயலாக வலுவடைகிறது ‘கஜா’ - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை


gaja-getting-stronger

  • kamadenu
  • Posted: 12 Nov, 2018 12:38 pm
  • அ+ அ-

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அதிதீவிர புயலாக வலுவடைந்து வருவதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள, கஜா புயல் சென்னைக்கு கிழக்கே - வட கிழக்கே 770 கி.மீ., தொலைவில் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடையும். மேற்கு - தென்மேற்காக தமிழகத்தில் வட கடலோர பகுதிகளை நோக்கி கஜா புயல் நகர வாய்ப்புள்ளது.

வரும் 15- ம் தேதி சென்னை - நாகப்பட்டினம் அருகே கஜா புயல் கரையை கடக்கும். இதனால் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.

இதன் காரணமாக நவம்பர் 14- ம் தேதி மாலை முதல் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகள், ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகளில் மழை தொடங்கும். பின்னர் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதிதீவிர கனமழையும், மற்ற பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close