[X] Close

பெரியாருக்கு சாதி அடையாளமா? மு.க.ஸ்டாலின் கண்டனம்


group-2-periyar

  • kamadenu
  • Posted: 12 Nov, 2018 12:30 pm
  • அ+ அ-

குரூப் 2 வினாத்தாளில் பெரியார் பெயருக்குப் பின்னால் அவரின் ஜாதியை எப்படிச் சேர்க்கலாம்? ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர் தந்தை பெரியார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று 11ம் தேதி நடைபெற்றது. இந்த வினாத்தாளில், திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியர் என்ற கேள்விக்கு,  அந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக 1. இ.வெ.ராமசாமி நாயக்கர், 2. ராஜாஜி, 3. காந்திஜி, 4. சி.என்.அண்ணாதுரை என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதில், பெரியாரின் பெயரை தவறாக பிரசுரித்திருந்தார்கள். அத்துடன் அவர் பெயருக்குப் பின்னால் ஜாதியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இதைக் கண்டு பலரும் கொந்தளித்தார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் பெயரும் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அவரின் பெயருக்குப் பின்னே சாதி அடையாளமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் செயல்.

1928ம் ஆண்டிலேயே, தன் பெயருடன் உள்ள சாதி அடையாளத்தை நீக்கியவர் தந்தை பெரியார். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, சமூக நீதிக்குப் போராடியவர் பெரியார். அவரை சாதி சொல்லி அவமதிக்கும் விதமாக குரூப் 2 தேர்வு வினாத்தாளை தயாரித்த டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close