[X] Close

ரஜினியின் கருத்துக்களை வரவேற்கிறேன்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


rajendra-balaji-about-rajini

  • kamadenu
  • Posted: 12 Nov, 2018 12:23 pm
  • அ+ அ-

திருவில்லிபுத்தூர்

முதலில் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்து எனக்குப் பிடிக்கும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

இதுகுறித்து திருவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலை வீசவில்லை. அமைச்சர்களுக்கு குளிர்விட்டுப் போயுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ஜெயலலிதா இல்லாததால் பிரேமலதாவுக்குத்தான் குளிர்விட்டுப் போயுள்ளது.

திமுக மத்தியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இருந்துள்ளது. இப்போது மட்டும் தீண்டத்தகாத கட்சியா? மத நல்லிணக்க ஆட்சிதான் மத்தியில் நடக்கிறது.

மக்களை ஏமாற்றி சாதியைக் கூறியோ, மதக் கலவரத்தை தூண்டிவிட்டோ ஓட்டு வாங்க முடியாது. மக்களுக்கு உழைத்தால் ஓட்டு போடுவார்கள். இந்த அரசு தொடர்ந்து இருக்கும்.

மது குடித்தால் உடலுக்குக் கேடு, சிகரெட் குடித்தால் உயிருக்கே கேடு. சர்கார் படத்தில் 22 முறை விஜய் சிகரெட் குடிக்கிறார். இது இளைஞர்களுக்கு காட்டும் நல்ல வழியா? எல்லோரும் எம்ஜிஆர் ஆக நினைத்தால் அது நடக்காது.

கமல்ஹாசன் கலாச்சாரம் இந்தத் தேர்தலோடு முடிந்துவிடும். வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல் மீசையை முறுக்கிக் கொண்டு திரிந்தால் அரசியலில் தூக்கில் போட்டு விடுவார்கள். கமல்ஹாசன் விவரம் தெரியாமல் யார் பேச்சையோ கேட்டு விவரமில்லாமல் கடலில் இறங்கிவிட்டு நீச்சல் தெரியாமல் முழிக்கிறார்.

முதலில் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்து எனக்குப் பிடிக்கும். ரஜினி அரசியலுக்கு வந்தால் எனக்குப் பிடிக்கும்.

நல்ல எண்ணம் உள்ளவர்கள், நல்ல கருத்துகளை சொல்பவர்கள் அப்படி யார் வந்தாலும் அதிமுகவில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். இதை முதல்வர் கே. பழனிசாமி ஏற்கெனவே சொல்லிவிட்டார் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close