[X] Close

எடப்பாடிக்கு ஆதரவு; திமுக, ஸ்டாலினுக்கு வசவு!- தமிழிசை காட்டம்


tamilisai-slams-stalin-and-dmk

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Nov, 2018 10:37 am
  • அ+ அ-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

முன்னதாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். பாஜகவுக்கு எதிராக ஓரணியாக திரள சந்திரபாபு நாயுடு பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். அந்த வரிசையிலேயே இந்த சந்திப்பும் நிகழ்ந்தது.

இந்த சந்திப்பு நடந்த நாள் முதலாகவே திமுகவை தமிழிசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவும் பதற்றமடைவதாக கனிமொழியும் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தமிழிசை மீண்டும் ஸ்டாலின், திமுகவை தாக்கி ட்வீட் செய்திருக்கிறார். இம்முறை அந்த ட்வீட் கடுமையானதாக இருக்கிறது.

தமிழினக் காவலர்களா?

அந்த ட்வீட்டில் "பாஜகவின் ஊதுகுழல்.?அறிவிக்கப்படாத பாஜக தலைவரா? என தமிழக முதல்வரை தரம் தாழ்ந்த விமர்சனம் செய்யும் திமுக ..வயிற்றுப் பிழைப்புக்காக மரம் வெட்ட ஆந்திர காடுகளுக்குச் சென்ற ஏழைத் தமிழர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொன்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வரவேற்று விருந்தோம்பிய தமிழினக் காவலர்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார் தமிழிசை.

மற்றொரு ட்வீட்டில், "அடிமட்டத் தொண்டனாக இருந்து முதல்வராக உயர்ந்தவரை சர்க்கஸ் ஆடும் மோடியின் அடிமை எனச்சாடும் கோபாலபுரத்து அரசியல் வாரிசை குளிப்பாட்ட இங்கே தமிழகத்தில் அரசு இருக்கிறதா? என அடுத்த மாநிலத்து அரசியல் வாரிசு நாயுடு இங்கேயுள்ள தமிழனின் அரசை கேலி செய்ததைக் கேட்டு புளங்காகிதம் அடைந்த தமிழினக் காவலர்கள்" என விமர்சித்திருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close