[X] Close

கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்


gaja-cyclone-crossing-areas

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 11 Nov, 2018 15:31 pm
  • அ+ அ-

தமிழகத்தை நோக்கி நகரும் ‘கஜா’ புயல் கடலூர் -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும், இதனால் 14, 15ம் தேதிகளில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ளது.

வடமேற்கு திசையை நோக்கி நகரும் ‘கஜா’ புயல் இரண்டு நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல், 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தமிழகம் நோக்கி நகரும் கஜா புயல், கடலூர் -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும். இதனால் 14, 15ம் தேதிகளில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது

வட தமிழகத்தில் மித மற்றும் கனமழை பெய்ய கூடும். நவம்பர் 15-ம் தேதி அநேக இடங்களில் மித மழை, ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும்.

நவம்பர் 12ந்தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் 12-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்.

சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close