[X] Close

7 பேர் விடுதலைக்கு அரசு அக்கறை காட்டவே இல்லை; - துரைமுருகன் குற்றச்சாட்டு


7-per-vidudhalai-duraimurugan

  • kamadenu
  • Posted: 11 Nov, 2018 11:53 am
  • அ+ அ-

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு அக்கறை காட்டவே இல்லை. தர்மபுரி பஸ் எரிப்பில் மாணவிகளைக் கொன்ற மூன்று பேரை விடுவிப்பதில் இருந்த அக்கறை  ஒரு சதவிகிதம் கூட இதற்குக் காட்டவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து சட்டப்பிரிவு 161ஐ பயன்படுத்தி தமிழக அரசே ஆளுநரிடம் கேட்டு விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த விடுதலை விவகாரம் என்னானது என்றே தெரியாத நிலையில், மத்திய அரசு நிராகரித்துவிட்டது எனும் விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்ததாவது:

ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு எந்த  அக்கறையும் காட்டவில்லை. மனு கொடுத்து பல மாதங்களாகியும் முதல்வரோ சட்ட அமைச்சரோ அதுகுறித்து எதுவும் கேட்காமல்தான் இருந்திருக்கிறார்கள்.

ஆனால், தருமபுரியில் பஸ்சை எரித்து மாணவிகளைக் கொன்று தண்டனை அனுபவித்து வரும் மூன்று பேரை விடுவிவிக்க அதிமுக அரசு அத்தனை ஆர்வம் காட்டியது. அந்த மூன்று பேரை விடுதலை செய்வதில் காட்டிய அக்கறையில் ஒரு சதவிகிதத்தைக் கூட 7 பேர் விடுதலைக்குக் காட்டவில்லை.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close