[X] Close

காய்ச்சல் குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் 


dengue-fever

  • kamadenu
  • Posted: 11 Nov, 2018 11:34 am
  • அ+ அ-

மதுரை

‘‘டெங்கு, பன்றிக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் பட்டியலை சேகரிக்கிறோம். விரைவில் அந்த பட்டியலை வெளியிடுவோம், ’’ என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், திருமங் கலத்தில் ராஜாஜி சிலை அருகிலி ருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தலைமை வகித்தார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேரணி யைத் தொடங்கிவைத்து பேசியது:

தமிழகத்திலுள்ள 32 வருவாய் மாவட்டங் களிலும் பகுதி வாரி யாக அனைத்து பகுதிகளிலும் காய்ச்சலை தடுக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் குறித்து மக்களுக்கு விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மூலம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் இல்லாத மதுரையை உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர் தயார் நிலையில் உள்ளனர். அரசு மருத்துவமனை யில் போதுமான மருந்துகள் இருப்பில் உள்ளன. எதிர்கட்சிகள் தேவையில்லாமல் காய்ச்சல் வதந்திகளை பரப்புகின்றனர். அரசு மருத்து வமனையில் வழங்கப்படும் தரமான சிகிச்சையால் பொது மக்கள் அதிக அளவில் சிகிச்சை பெற வருகின்றனர். காய்ச்சல் ஏற் பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியவர் பட்டியல் சேகரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close