கும்பகோணத்தில் 67 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் கண்டுபிடிப்பு


திருமங்கை ஆழ்வார் சிலை

சென்னை: தஞ்சாவூர் மாவட்​டம், கும்பகோணத்​தில் பழமையான சவுந்​திரராஜ பெரு​மாள் கோயில் உள்ளது. இந்த கோயி​லில் 1957 முதல் 1967-ம் ஆண்டு​களுக்​குள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திரு​மங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் என 4 சிலைகள் திருடப்​பட்டன. இந்த சிலைகள், கடத்தல் கும்​பலால் வெளி​நாடு​களுக்கு விற்​கப்​பட்​டிருக்​கலாம் என்ற சந்தேகம் எழுந்​தது. இதுதொடர்​பாக, தமிழ்​நாடு சிலை திருட்டு தடுப்புப்​ பிரிவு போலீ​ஸார் 2020-ல் வழக்​குப்​பதிவு செய்து விசாரணை மேற்​கொண்​டனர். இதில், இந்த சிலைகள் வெளி​நாட்​டில் வெவ்​வேறு அருங்​காட்​சி​யகங்​களில் இருப்பது கண்டறியப்​பட்​டது.

குறிப்​பாக, திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் ஆக்ஸ் போர்டு பல்கலை.​யின், அஸ்மோலியன் அருங்​காட்​சி​யகத்​தால், 1967-ல் வாங்​கப்​பட்டது கண்டறியப்​பட்​டது. மேலும், காளிங்​கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் அமெரிக்​கா​வில் உள்ள அருங்​காட்​சி​யகங்​களில் இருப்பது கண்டறியப்​பட்​டுள்​ளது. சவுந்​திரராஜ பெரு​மாள் கோயி​லில் திருடப்​பட்ட சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகள் வைக்​கப்​பட்​டதும் உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து, வெளி​நாட்​டில் உள்ள உண்மையான சிலைகளை மீட்டு தமிழகத்​துக்கு கொண்டு​வரும் முயற்​சி​யில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் ஈடுபட்​டனர். அதன்​படி, அறிவியல்​பூர்​வமான ஆதாரங்​களைத் தொகுத்து, 4 சிலைகளை​யும் கும்​பகோணம் சவுந்​திரராஜ பெரு​மாள் கோயிலுக்கு சொந்​த​மானது என, சம்பந்​தப்​பட்ட நாடு​களுக்கு அறிக்கை அனுப்பி வைக்​கப்​பட்​டது. இதில்,லண்டன் ஆக்ஸ்​போர்டு பல்கலைக்கழக பிரதி​நிதி ஒருவர், தமிழகம் வந்து, சிலை தொடர்பான உண்மை தன்மையை ஆராய்ந்​தார். அப்போது, புலன் விசாரணை அதிகாரி டி.எஸ்​.பி.சந்திரசேகரன் சமர்ப்​பித்த ஆவணங்களை ஏற்று, அச்சிலை தமிழகத்தை சேர்ந்​தது​தான் என, ஆக்ஸ்​போர்டு பல்கலை. பிரதி​நிதி ஒப்புக்​கொண்​டார்.

இதையடுத்து, திரு​மங்கை ஆழ்வார் வெண்​கலச் சிலையை தமிழகத்​துக்கு திருப்பி அனுப்ப லண்டன் ஆக்ஸ்​போர்டு பல்கலை. ஒப்புக்​கொண்​டது. விரை​வில் அச்சிலை தமிழகத்​துக்கு கொண்டு​வரப்​பட்டு, சம்பந்​தப்​பட்ட கும்​பகோணம் சவுந்​திரராஜ பெரு​மாள் கோயி​லில் பழையபடி வைக்​கப்பட உள்ளது. மேலும், காளிங்​கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய சிலைகளை அமெரிக்​கா​வில் இருந்து மீட்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் மேற்​கொண்​டுள்​ளனர். முன்னதாக ​திரு​மங்கை ஆழ்​வார் சிலையை தமிழகம் ​கொண்டுவர நட​வடிக்கை மேற்​கொண்ட சிலை கடத்​தல் தடுப்புப் பிரிவு ​போலீ​ஸாரை டிஜிபி சங்​கர் ஜிவால் பாராட்​டினார்​.

x