மானாமதுரை அருகே கண்மாய் உடைப்பு: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்


மானாமதுரை: மானாமதுரை அருகே கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டதால், 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தில் பொதுப்பணித்துறை கண்மாய் உள்ளது. அண்மையில், இக்கண்மாய் வைகை ஆற்று நீர் மூலம் நிரம்பியது. இந்நிலையில் நேற்றிரவு கண்மாய் கரையை சிலர் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் கீழத்தெருவில் உள்ள குடியிருப்புக்குள்புகுந்தது.

இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் உணவு பொட்டலங்களை வழங்கினர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் கண்மாய் உடைப்பை சரி செய்தனர். பின்னர் வீடுக்களுக்குள் புகுந்த தண்ணீரை மக்கள் வெளியேற்றினர்.

x