[X] Close

மலேசியாவில் கொத்தடிமைகளாக தவித்த 48 தமிழர்கள் மீட்பு: உணவு, தண்ணீர்கூட கொடுக்காமல் வேலை வாங்கிய நிறுவன உரிமையாளர் கைது


malaysia-slaves

  • kamadenu
  • Posted: 09 Nov, 2018 11:32 am
  • அ+ அ-

மலேசியாவில் சம்பளம், உணவு, தண்ணீர் கிடைக்காமல் 3 மாதங்களாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த 48 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை, தாருகாபுரம், ராமசாமியாபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 48 பேர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக மலேசியாவுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள மலைப் பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக அவர்களை அழைத்துச் சென்ற நிறுவனம், முதல் ஒரு மாத சம்பளத்தை மட்டும் கொடுத்துள்ளது. அதன் பிறகு 3 மாதங்கள் சம்பளம் தரவில்லை. மேலும், ஒருவேளை மட்டும் உணவு, தண்ணீர் கொடுத்துவிட்டு மற்ற நேரம் பட்டினி போட்டுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது நிலை குறித்து செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினர்.

பாஸ்போர்ட்கள் முடக்கம்‘‘எங்களது பாஸ்போர்ட்கள் அனைத்தும் நிறுவனத்தின் வசம் உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டாய வேலை வாங்குகின்றனர். 3 மாதமாக சம்பளம் தரவில்லை. இதுகுறித்து கேட்டால் அடியாட் களை வைத்து அடித்து, கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். சோறு, தண்ணீர் இன்றி பட்டினி கிடக்கிறோம். எங்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அந்த வீடியோவில் அவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.

இந்த காட்சிகள், மலேசியாவில் உள்ள தமிழர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டது. இது, மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன் முருகேசனின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து, அவரது முயற்சியால் 48 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழ் வம்சாவளியை சேர்ந்த, மலேசியாவின் கரக் தொகுதி எம்எல்ஏ காமாட்சி துரைராஜு, தமிழக தொழிலாளர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதைக் காட்டும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

“தமிழக தொழிலாளர்கள் 48 பேரும் பத்திரமாக இருக்கின்றனர். எனவே, உறவினர்கள் பயப்பட வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவ னத்தாருடன் பேசி, அவர்களது சம்பளத்தை பெற்றுத் தந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதனால், தொழிலாளர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். 48 தமிழர்களும் ஓரிரு நாட்களில் சென்னை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், 48 தமிழர்களை கொத்தடிமையாக வைத்திருந்த மலேசிய நிறுவனத்தின் உரிமை யாளரை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close