[X] Close

இலவச லேப்டாப், சைக்கிள், சீருடை, ஆடு, கோழி, மாடு; பணத்துக்காக படமெடுப்பவர்களுக்கு சொல்ல அருகதையே இல்லை – அமைச்சர் காமராஜ் தாக்கு


sarkar

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 20:46 pm
  • அ+ அ-

இலவச லேப்டாப், இலவச சைக்கிள், சீருடை, ஆடும், மாடு, கோழி என்று கொடுப்பது மக்களின் வளர்ச்சிக்காகத்தான். வாழ்வாதாரத்துக்காகத்தான். இதையெல்லாம் கூடாது என்றும் தவறு என்றும் சொல்ல பணம் பண்ணுவதற்காக படம் எடுப்பவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது:

சர்கார் படத்தில் தவறான காட்சிகளெல்லாம் காட்டப்பட்டிருக்கின்றன. இலவசப் பொருட்கள் குறித்தெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இலவச லேப்டாப், இலவச சைக்கிள், சத்துணவு, இலவச சீருடை என்று வழங்கப்பட்டதால்தான், தமிழகத்தில் உயர்கல்வியின் நிலை உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட, 48.6 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

அதேபோல, கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக, வாழ்வாதாரத்துக்காக ஆடு, கோழி, கறவை மாடுகள், விலையில்லா அரிசி என வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பசியைப் போக்கி, பஞ்சத்தைப் போக்கி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

பணத்தை வாங்கிக் கொண்டு நடிக்கிறவர், பணம் போட்டு கொள்ளை லாபம் பார்க்க நினைக்கிற தயாரிப்பாளர்கள், புகழுக்காக ஏதோ புரட்சிக் கருத்துகளைச் சொல்லிக்கொள்வது போல் நடிப்பவர்கள் என இவர்களுக்கு இலவசங்களைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.இவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close