[X] Close

மறைந்த தலைவர்களைப் பற்றி படம் எடுப்பவர்கள் நாகரிகமானவர்களா?- டிடிவி கேள்வி


ttb-slams-sarkar-crew

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Nov, 2018 15:03 pm
  • அ+ அ-

சர்கார் பட சர்ச்சை தொடர்பாக பதிலளித்த டிடிவி தினகரன், மறைந்த தலைவர்களைப் பற்றி இதுபோன்று எல்லாம் படம் எடுப்பது நாகரிகமா எனப் பேசினார்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வந்தது சர்கார். இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் சில மறைந்த தலைவர்களை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக அதிமுக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, கே.சி.அன்பழகன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், "வியாபார நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இது. மக்களுக்கு கருத்து சொல்வதற்காக எடுக்கப்பட்ட டாக்குமென்டரி அல்ல. நடிகர்கள் எல்லாம் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் நடித்திருப்பார்கள்.

அம்மா இருக்கும்போதே இந்தப் படத்தை எடுத்திருந்தார்கள் என்றால் அவர்கள் எல்லாம் வீரர்கள்தான். இந்தப் படம் முந்தைய படங்கள் போலத்தான் ஓடியிருக்கும். நீங்கள்தான் எல்லோரும் படத்தை பெரிதாக ஓட வைக்க தேவையில்லாமல் விளம்பரம் செய்து கொடுக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது. மறைந்த தலைவர்களைப் பற்றி அவர்கள் இல்லாதபோது எடுப்பவர்கள் எவ்வளவு நாகரிகமானவர்கள் என்பது என எனக்குத் தெரியவில்லை" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close