[X] Close

கண்டிப்போம்; எச்சரிப்போம்; சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்; - சர்கார் மீது அமைச்சர் உதயகுமார் காட்டம்


sarkar-rbudhayakumar

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 14:44 pm
  • அ+ அ-

முதலில் கண்டிப்போம். பிறகு எச்சரிப்போம். அதையடுத்து சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதைச் செய்வோம் என்று சர்கார் படம் குறித்து அமைச்சர் உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

சர்கார் படம் உண்மைக்குப் புறம்பான, பொய்யான விஷயங்களை, விஷமத்தனமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறது. லாப நோக்கத்துடன், வியாபார நோக்கத்துடன், போட்ட பணத்தை பல மடங்கு எடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இஷ்டத்துக்கு உண்மைக்குப் புறம்பான கருத்துகளையெல்லாம் இந்த சர்கார் படம் சொல்லியிருக்கிறது. தமிழக மக்கள், இந்தப் பொய்யான கருத்துக்களை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

சர்கார் படத்தின் சம்பந்தப்பட்டவர்களே, படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள பெயர்களையும் காட்சிகளையும் அவர்களாகவே நீக்கவேண்டும்.

ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துகிற எந்த விஷயத்தையும் எவரையும் நாங்கள் மன்னிக்கமாட்டோம். முதலில், கண்டிப்போம். பிறகு எச்சரிப்போம். அடுத்து சட்டப்படி என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றைச் செய்வோம். ஜெயலலிதாவின் புகழைக் காப்போம்

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close