[X] Close

அப்பாவிகளை கீழே தள்ளுவீர்கள் அமைச்சரை வேடிக்கை பார்ப்பீர்களா?- ராமதாஸ் காட்டம்


ramdoss-slams-vijabhaskar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Nov, 2018 11:17 am
  • அ+ அ-

தீபாவளியையொட்டி தனது சொந்த ஊரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் உலா வந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், சாமான்யர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் மட்டும் அவர்களை கீழே தள்ளிவிடும் காவல்துறை அமைச்சரை மட்டும் வேடிக்கை பார்த்ததா என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டரில், "தீப ஒளி திருநாளையொட்டி சொந்த ஊரிலும், சொந்தத் தொகுதியிலும் தலைக்கவசம் அணியாமல்  இரு சக்கர ஊர்தியில் வலம் வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: செய்தி  
அமைச்சர் என்றால் விதி மீறலாமா? அப்பாவிகளை விரட்டிப்பிடித்து கீழே தள்ளும் காவல்துறை அமைச்சரை மட்டும் வேடிக்கை பார்த்ததா?"
எனப் பதிவிட்டுள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close