[X] Close

ஜெயலலிதா இருந்திருந்தா ‘சர்கார்’ எடுத்திருப்பீங்களா? குளிர்விட்டு போயிருச்சு; - அமைச்சர் ஜெயக்குமார்


sarkar-jeyakumar

விஜய் - அமைச்சர் ஜெயக்குமார்

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 10:50 am
  • அ+ அ-

ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால், சர்கார் படத்தை எடுக்க தைரியம் வந்திருக்குமா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ள விஜய் படமெடுத்துக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காக, அடுத்தவர்களை மட்டம் தட்டியோ காயப்படுத்தியோ எந்தச் செயலையும் செய்யக்கூடாது. சர்கார் படத்தின் மூலமாக விஜய் அப்படித்தான் செய்திருக்கிறார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சர்கார் படத்தை எடுத்திருப்பீர்களா? படத்தை எடுக்க தைரியம் வந்திருக்குமா?

எம்ஜிஆரைப் போல யாரும் வரவே முடியாது. தலைகீழாக நின்றாலும் விஜய், எம்ஜிஆர் போல வரமுடியாது. அதிமுக மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி எனும் பெயரை படத்தில் வைத்துள்ளார். இது மோசமான செயல். மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close