[X] Close

விஜய் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி சொல்லணும்; - அமமுக புகழேந்தி கேலி


sarkar-kadambur-raju

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 10:33 am
  • அ+ அ-

நடிகர் விஜய் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி சொல்லவேண்டும். சர்கார் படத்தின் அதிகக் கூட்டத்துக்கு அமைச்சர்தான் காரணம் என்று அமமுகவின் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திண்டுக்கல்லில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஏற்கெனவே, விஜய் நடித்த மெர்சல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜனே காரணம். அவர் எதிர்த்தால், மக்கள் ஆதரிப்பார்கள். அப்படித்தான் மெர்சலுக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தார்கள் மக்கள்.

இப்போது அதே விஜய் நடித்த சர்கார் படம் வந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, வெற்றி பெற வைக்கும் நோக்கில் பேசி வருகிறார். எனவே நடிகர் விஜய், அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி சொல்லவேண்டும்.

இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close